WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான அனைத்து அணிகளின் முழு விவரம்!

Updated: Sun, Dec 15 2024 19:45 IST
Image Source: Google

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று (டிசம்பர் 15) பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்ததன் காரணமாக 19 இடங்களுக்கு மட்டுமே இந்த ஏலமானது நடைபெற்றது.

இந்த ஏலத்தில் இந்திய வீரர்கள் சிம்ரன் ஷேக், ஜி கமாலினி, பிரேமா ராவத் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் டியோன்ட்ரா டோட்டின் உட்பட நான்கு வீராங்கனைகள் தலா ரூ.1 கோடிக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடந்து முடிந்த இந்த ஏலத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் ஷேக் ரூ.1.9 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டதன் மூலம், இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் சென்ற வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார்.

அதேசமயம் வெஸ்ட் இண்டிஸின் டியோன்ட்ரா டாட்டினும் ரூ.1.7 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. முன்னதாக ஏலத்தில் கமலினி தனது அடிப்படை விலையை ரூ.10 லட்சமாக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான அனைத்து அணிகளின் முழு விவரம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன், எல்லிஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ஜார்ஜியா வேர்ஹாம், கேட் கிராஸ், ஏக்தா பிஷ்ட், எஸ் மேக்னா, சோஃபி மோலினக்ஸ், டான் மோலினக்ஸ்.

ஏலத்தில் ஆர்சிபி அணி வாங்கிய வீராங்கனைகள்: பிரேமா ராவத் (1.20 கோடி), ஜோஷிதா விஜே (10 லட்சம்), ராகவி பிஷ்ட் (10 லட்சம்), ஜாக்ரவி பவார் (10 லட்சம்).

மும்பை இந்தியன்ஸ் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), நாட் ஸ்கைவர்-பிரண்ட், அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், யாஸ்திகா பாட்டியா, அமன்ஜோத் கவுர், சைகா இஷாக், ஹீலி மேத்யூஸ், சோலே ட்ரையான், ஜிந்திமணி கலிதா, ஷப்னிம் இஸ்மாயில், சஜீவன் சஜ்னா, அமன்தீப் கவுர், எஸ்.பி.கீர்த்தன.

ஏலத்தில் மும்பை வாங்கிய வீராங்கனைகள்: ஜி கமலினி (1.60 கோடி), நாதின் டி கிளர்க் (30 லட்சம்), சமஸ்கிருதி குப்தா (10 லட்சம்), அக்ஷிதா மகேஸ்வரி (20 லட்சம்).

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி: ஜெமிமா ரோட்ரிக்ஸ், மெக் லெனிங், ஷெஃபாலி வர்மா, ராதா யாதவ், ஷிகா பாண்டே, மரிசான் கேப், டைட்டாஸ் சாது, ஆலிஸ் கேப்ஸி, மின்னு மணி, தனியா பாட்டியா, ஜெஸ் ஜோனாசென், சினேகா தீப்தி, அருந்ததி ரெட்டி, அன்னாபெல் சதர்லேண்ட்.

ஏலத்தில் டெல்லி அணி வாங்கிய வீராங்கனைகள்: என் சரணி (₹ 55 லட்சம்), நந்தினி காஷ்யப் (₹ 10 லட்சம்), சாரா பிரைஸ் (₹ 10 லட்சம்), நிக்கி பிரசாத் (₹ 10 லட்சம்).

யுபி வாரியர்ஸ் முழு அணி: சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மா, தஹ்லியா மெக்ராத், அலிசா ஹீலி (கேப்டன்), அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், விருந்தா தினேஷ், பூனம் கெம்மர், சைமா தாகூர், கௌஹர் சுல்தானா, சாமரி அத்தபட்டு, உமா சேத்ரி.

ஏலத்தில் யுபி அணி வாங்கப்பட்ட வீராங்கனைகள்: அலனா கிங் (30 லட்சம்), ஆருஷி கோயல் (10 லட்சம்), கிராந்தி கவுர் (10 லட்சம்).

குஜராத் ஜெயண்ட்ஸ் முழு அணி: ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி (கேப்டன்), ஹர்லீன் தியோல், தயாளன் ஹேம்லதா, தனுஜா கன்வர், ஷப்னம் ஷகீல், லாரா வோல்வார்ட், ஃபோப் லிச்ஃபீல்ட், மேக்னா சிங், மன்னத் காஷ்யப், காஷ்வி கௌதம், பிரியா மிஸ்ரா, சயாலி சத்கரே, பார்தி ஃபுல்மாலி.

Also Read: Funding To Save Test Cricket

ஏலத்தில் குஜராத் அணி வாங்கிய வீராங்கனைகள்: சிம்ரன் ஷேக் 1.90 கோடி, டியான்ட்ரா டோட்டின் (1.70 கோடி), டேனியல் கிப்சன் (30 லட்சம்), பிரகாஷிகா நாயக் (10 லட்சம்).

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை