உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!

Updated: Thu, Jan 04 2024 21:57 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 79 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணி வெறும் 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்டநாயகனாகவும், 2 போட்டிகளில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 2 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா என்று மொத்தமாக 26 புள்ளிகளுடன் 54.16 வெற்றி சதவிகிதத்துடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

அதேபோல் முதல் போட்டியில் வென்று முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா அணி, தற்போது இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்ததால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் தலா 50 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் 3,4 மற்றும் 5 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

அதேபோல் பாகிஸ்தான் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 45.83 வெற்றி சதவிகிதத்துடன் 6ஆவது இடத்திலும், 16.67 வெற்றி சதவிகிதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 7ஆவது இடத்திலும், இங்கிலாந்து அணி 5 போட்டியில் 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் 15 சதவிகித வெற்றியுடன் 8ஆவது இடத்திலும், இலங்கை அணி 2 தோல்விகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை