WTC 2023: ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!

Updated: Mon, Jun 12 2023 12:41 IST
WTC Final: 'It Was Great Effort Over The Last 2 Years', Says Ashwin After India's WTC Final Defeat (Image Source: Google)

இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று முடிவடைந்தது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது முன்னதாக 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா நான்காம் நாள் ஆட்டத்தை 164 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் முடித்தது. 

விராட் கோலி மற்றும் அஜின்கியா ரஹானே களத்தில் இருந்ததால் நிச்சயமாக இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது . இன்றைய நாள் ஆட்டத்தில் 280 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கிய விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே பொறுமையாகவே ஆட்டத்தை துவங்கினர் . இருப்பினும் துரதிஷ்டவசமாக விராட் கோலி 49 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையும் சரிந்தது . இதனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. கடந்த முறை நியூசிலாந்து அணி இடம் தோல்வியை தழுவிய இந்தியா இந்த முறை ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருக்கிறது . கடந்த பத்து வருடங்களில் ஐசிசி கோப்பை காண இறுதிப் போட்டியில் இந்திய அணி சந்திக்கும் நான்காவது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில்  “கடந்த 2 ஆண்டு கடும் உழைப்பு தோல்வியில் முடிந்தது ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்து குழப்பங்களுக்கு மத்தியிலும் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்களை பாராட்ட வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சளரான அஸ்வின் சேர்க்கப்படாதது விமர்சனத்திற்கு வித்திட்டது. ஆடுகளத்தின் தன்மை கருதி அஸ்வின் சேர்க்கப்படவில்லை என அணி நிர்வாகம் கூறியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை