WTC Final: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்; பேட்டர்களை கதறவிடும் ரபாடா

Updated: Wed, Jun 11 2025 17:47 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பேட்டர்களை நிலைகுலைய வைத்துள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங்  செய்து வரும் ஆஸ்திரேலிய அணியானது முதல்நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து பறிதாபமான நிலையில் உள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரகள் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்துள்ளனர். 

அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களைச் சேர்த்து அணியின் நம்பிக்கையாக களத்தில் உள்ளார். இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் ஒரே ஓவரில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன்படி இன்னிங்ஸின் 7அவது ஓவரை காகிசோ ரபாடா விசிய நிலையில் அந்த ஓவரை உஸ்மான் கவாஜா எதிர்கொண்டார். 

ஓவரின் முதலிரண்டு பந்துகளை பார்த்து விளையாடிய கவாஜா, மூன்றாவது பந்தை தடுத்து விளையாட முயற்சித்த நிலையில் பந்து எட்ஜாகி முதல் ஸ்லீப்பில் இருந்த டேவிட் பெடிங்ஹாமிடம் தஞ்சமடைந்தது. அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் முதல் பந்தை பவுண்டரி அடித்த நிலையில், அவரும் அதே ஓவரின் கடைசி பந்தில் ஐடன் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார். இந்நிலையில் காகிசோ ரபாடா அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது வைரலாகி வருகிறது. 

 

தென் அப்பிரிக்க பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேட்ச்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை