நேற்று இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி துவங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை.

Advertisement

ஆஸ்திரேலியா அணியை முதலில் 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சரித்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் ஆட்டம் இழக்காமல் 251 உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, முதல் நாள் முடிவில் 327 ரன்கள் சேர்த்து மிகப்பெரிய முன்னிலையில் சென்று விட்டார்கள்.

Advertisement

டிராவிஸ் ஹெட் வந்ததிலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 146 பந்தில் 156 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். ஆனால் இவர் கடைசி நேரத்தில் வீசப்பட்ட ஷார்ட் பந்துகளுக்கு மிகவும் தடுமாறினார். இவரது பலவீனம் இதுவாக இருக்க இந்தியா இதை ஆரம்பத்திலே செய்யாமல் தவறவிட்டு இருந்தது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மகாம்பிரே “டிராவிஸ் ஹெட்டிற்கு ஷார்ட் பந்துகளை வீசுவது அவருக்கு எதிரான திட்டம் என்று நாங்கள் எப்போதும் உணர்ந்தே இருந்தோம். ஆனால் நீங்கள் சொன்னது போல அதை நாங்கள் கொஞ்சம் முன்பே செய்திருக்க வேண்டும். அதாவது முப்பது நாற்பது ரன்களில். ஆனால் நீங்கள் கேப்டனை நம்ப வேண்டும். அவர் அவரது உள்ளுணர்வின்படி சென்றார். 

அப்பொழுது அப்படியான பந்துகள் வீசுவதற்கான சூழ்நிலை இல்லை என்று அவர் நினைத்தார். நான் அதை சற்று முன்னதாகவே செய்திருக்கலாம் என்று நினைத்தேன். நாங்கள் எடுத்த இரண்டாவது புதிய பந்து சீம் ஆனதைப் பார்த்தோம். அதே சமயத்தில் கட் ஆனது. எனவே நாளை காலை எங்களுடைய முதல் செசன் முக்கியமானதாக இருக்கும். சீக்கிரத்தில் சில விக்கட்டுகளை வீழ்த்தினால் நாங்கள் மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியும்” என்று கூறியிருக்கிறார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News