மூன்றாம் நடுவரை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்; வைரலாகும் ட்விட்டர் பதிவு!

Updated: Sat, Jun 10 2023 22:13 IST
Image Source: Google

நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  173 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 123 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று ஆரம்பத்திலேயே லபுசாக்னே 41 ரன்களுக்கு அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 

அடுத்ததாக மிச்சல் ஸ்டார்க் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றனர். ஆஸ்திரேலியா அணி கிட்டத்தட்ட 400 ரன்கள் முன்னிலையை கடந்தது. அதன் பிறகு ஸ்டார்க் 41 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி 66 ரன்கள் அடித்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் 270 ரன்கள் அடித்து எட்டு விக்கெட் இழந்திருந்தது. ஆஸ்திரேலியா அணி அத்துடன் டிக்ளர் செய்தது. மொத்தமாக 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இதையடுத்து, 444 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் அடித்திருந்தது. அந்த நேரத்தில் ஷுப்மன் கில் போலன்ட் பந்தை எதிர்கொண்டபோது, பந்து எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் நின்ற கேமரூன் கிரீன் பிடித்தார். 

ஆனால் அது கேட்ச்சா? இல்லையா? எனும் முடிவு மூன்றாவது நடுவரிடம் சென்றது. ரீப்ளேவில் பார்த்தபோது பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. அவுட் இல்லை என்று வரும் என பலரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார். 

 

இந்த விவகாரம் தற்போது இணையதளத்தில் சர்ச்சையாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், மூன்றாவது நடுவரின் முடிவு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை