WTC 2023: தனது பிளேயிங் லெவனை அறிவித்து முகமது கைஃப்; யாருக்கெல்லாம் இடம்? 

Updated: Fri, Jun 02 2023 22:02 IST
WTC Final: Would Play Kishan Over Bharat To Play Attacking Shots Against Old Ball At Number Six, Say (Image Source: Google)

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன. டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி ஜூன் 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இறுதி போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதால், முன்னாள் வீரர்கள் பலரும் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப், இறுதி போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ள முகமது கைஃப், மிடில் ஆர்டரில் விராட் கோலி, புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக இஷான் கிஷனிற்கே இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கே.எஸ் பாரத்தை விட ரிஷப் பந்தின் இடத்தில் களமிறங்க இஷான் கிஷனே சரியான நபராக இருப்பார் என்றும் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அதே போல் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ள முகமது கைஃப், பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளார்.

முகமது கைஃப் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் லெவன்: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜின்கியா ரஹானே, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை