ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு!

Updated: Tue, Jul 05 2022 19:34 IST
Image Source: Google

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் கோப்பையை நியூசிலாந்து வென்றது. 2ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதன் இறுதிப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள்  மோதும். எனவே அனைத்து அணிகளும் முதலிரண்டு இடங்களை பிடிக்கத்தான் போராடும்.

இரண்டாவது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி தான் தொடர்ச்சியாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.  இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகளில் பெரும்பாலும் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது ஆஸ்திரேலியா.

வெற்றி சதவிகிதங்களின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், அதிகமான வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 77.78 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி 71.43 வெற்றி சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் உள்ளது. 58.33 சதவிகிதத்துடன் 3ஆம் இடத்தில் இருந்துவந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு பிறகும் 3ம் இடத்தில்தான் உள்ளது. ஆனால் வெற்றி சதவிகிதம் 58.33லிருந்து 53.47 ஆக குறைந்துள்ளது.

முதலிரண்டு இடங்களுக்குள் சென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடும் வாய்ப்பை பெறும். அதற்கு, குறைந்தபட்சம் 2ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவை விட அதிக சதவிகிதத்தை பெற வேண்டும். அதற்கு முடிந்தவரை அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும். 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் மேலும் சரிந்துள்ளது. அதனால், 53.47 சதவிகிதத்தில் இருக்கும் இந்திய அணி, 71.43 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியை முந்துவது கடினமாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 7ஆம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியின் வெற்றி சதவிகிதம் 28.89லிருந்து 33.33 ஆக உயர்ந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை