19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோ்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் 48 போட்டிகளில் விளையாடவுள்ளன. 4 பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெறும்.

Advertisement

இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஜனவரி 15ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பிறகு, ஜனவரி 19ஆம் தேதி அயர்லாந்தையும், ஜனவரி 22ஆம் தேதி உகாண்டாவையும் எதிர்கொள்கிறது.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக யாஷ் துல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், அன்க்ரிஷ் ரகுவன்ஷி, எஸ்கே ரஷீத் (துணை கேப்டன்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாத், தினேஷ் பானா , ஆராத்யா யாதவ் (விக்கெட் கீப்பர்), ராஜ் அன்கட் பாவா, மனவ் பரக், கௌசல் தாம்பே, ஆர்எஸ் ஹங்கார்கேகர், வசு வட்ஸ், விக்கி ஓஸ்த்வல், ரவிக்குமார், கர்வ் சங்க்வான்.

கூடுதல் வீரர்கள்: ரிஷித் ரெட்டி, உதய் சஹாரன், அன்ஷ் கோசாய், அமித் ராஜ் உபத்யாய், பிஎம் சிங் ரத்தோர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் வென்றுள்ளது. 2016 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் இறுதி ஆட்டம் வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News