ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  துபாயில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி கடைசி ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்றது.

Advertisement

இந்த வெற்றியில் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. போட்டிக்கு பின் ஜடேஜாவை நேர்காணல் செய்தார் சஞ்சய் மஞ்சரேக்கர். 2019 ஒருநாள் உலக கோப்பையின்போது, ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என சஞ்சய் மஞ்சரேக்கர் வர்ணனையில் விமர்சித்திருந்தார். 

Advertisement

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜாவை மஞ்சரேக்கர் விமர்சித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜடேஜாவை விமர்சனம் செய்ததை மனதில் வைத்துக்கொண்டு, அவரை நேர்காணல் செய்யும்போது, என்னுடன் பேசுவதில் ஆட்சேபனை இல்லையே என ஜடேஜாவிடம் கேட்டார் மஞ்சரேக்கர். 

 

அதற்கு, கண்டிப்பாக.. அதெல்லாம் எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை என்று ஜடேஜா சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News