தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த யுவராஜ்; தோனி, கங்குலிக்கு இடமில்லை!

Updated: Sun, Jul 14 2024 13:26 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி 2017ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்த இடைபட்ட காலத்தில் இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 303 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 15 சதம், 71 அரைசதங்கள் என 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மேற்கொண்டு இந்திய அணி கடந்த 2007ஆம் அண்டு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்லவும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரையும் வெல்வதற்கும் மிக முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்தாண்டு தொடங்கப்பட்ட லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரிலும் இந்தியா சாம்பியன்ஸ் அணியை வழிநடத்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளார். 

இந்நிலையில் யுவராஜ் சிங் தனது ஆல் டைப் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். அவரது அணியில் இந்தியாவின் ஜாம்பவான் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் தனக்கும் 12ஆம் வீரராக வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேசமயம் இந்திய அணிக்கு ஐசிசி டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட தொடர்களை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனிக்கு அவரது அணியில் இடமளிக்கவில்லை. 

 

மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், கிளென் மெக்ராத், ஷேன் வார்னே ஆகியோரையும், தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், இலங்கை அணியின் முத்தையா முரளிதரன், இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப் மற்றும் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோருக்கு இந்த அணியில் இடமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

யுவராஜ் சிங் தேர்வ்வு செய்த ஆல் டைம் சிறந்த லெவன்: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம், ஆண்ட்ரூ பிளின்டாஃப், யுவராஜ் சிங் (12ஆவது வீரர்)

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை