ஐபிஎல் 2023: புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய யுஸ்வேந்திர சஹால்!

Updated: Thu, May 11 2023 20:44 IST
Yuzvendra Chahal becomes the leading wicket-taker in IPL history!
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் ஜேசன் ராய் 10 ரன்களிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 18 ரன்களிலும் என டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். இதையடுத்து இணைந்த வெங்கடேஷ் ஐயர்- நிதீஷ் ராணா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

அப்போது ஆட்டத்தின் 11ஆவது ஓவரில் பந்துவீச வந்த யுஸ்வேந்திர சஹால் தனது முதல் ஓவரிலேயே கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

சொல்லப்போனால் அவரை விட மிகவும் குறைந்த போட்டிகளில் 184 விக்கெட்களை எடுத்து அவரது சாதனையை முறியடித்துள்ள சஹால் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் புதிய சாதனையும் படைத்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

  • யுஸ்வேந்திர சஹால் : 184* (143 போட்டிகள்)
  • டுவைன் ப்ராவோ : 183 (161 போட்டிகள்)
  • பியூஸ் சாவ்லா : 174* (175 போட்டிகள்)
  • அமித் மிஸ்ரா : 172* (160 போட்டிகள்)
  • ரவிச்சந்திரன் அஸ்வின் : 171* (195 போட்டிகள்)

கடந்த 2013இல் மும்பை அணியில் தனது பயணத்தை தொடங்கி பெரும்பாலும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் அபாரமாக செயல்பட்டு தொட்டாலே பறக்கும் சின்னசாமி மைதானத்தில் தைரியமாக பந்து வீசி நிறைய விக்கெட்டுகளை எடுத்த சஹால் இந்தியாவுக்காகவும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 2017 முதல் முதன்மை ஸ்பின்னராக விளையாடுகிறார்.

இருப்பினும் 2021 வாக்கில் ஃபார்மை இழந்து தடுமாறியதால் 2021 டி20 உலகக்கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவர், 2022 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்து ஊதா தொப்பியை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதிலிருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த வருடமும் ராஜஸ்தானின் வெற்றிகளுக்கு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை