இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக வலம் வருபவர் யுவேந்திர சாஹல். ஃபார்ம் அவுட்டில் இருந்து வந்த சாஹல், ஐபிஎல் தொடர் மூலம் கம்பேக் கொடுத்து தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.

Advertisement

தனது வேடிக்கையான செயல்கள் மற்றும் போஸ்களால் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த யுவேந்திர சாஹல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடன கலைஞரான தனஸ்ரீ வெர்மாவை கரம்பிடித்தார். இருவரும் சேர்ந்து நடமாடும் டிக்டாக் காணொளிகள் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டிங் ஆவது வழக்கம். இதன் மூலம் பிரபலமான ஜோடிகளில் ஒன்றாக இடம்பிடித்தனர்.

Advertisement

இந்நிலையில் இவர்கள் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியானது. இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக ரகசியமாக முறையீடு செய்துள்ளதாகவும், விரைவில் பிரியவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இருவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் அமைந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் தனஸ்ரீ வெர்மா தனது பெயரின் பின் இருந்த சாஹல் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். சகஜமாக தனஸ்ரீ என்று மட்டும் மாற்றியுள்ளார். இதே போல புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள சாஹல், அதில் இனி புதிய வாழ்க்கை தொடங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் பிரியவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள இந்த ஜோடிக்கு குழந்தை எதுவும் கிடையாது. எனவே மற்றொரு தரப்பினர் இருவருக்கும் குழந்த பிறக்கவுள்ளதாகவும், அதன் காரணமாக தான் சாஹல் இப்படி ஒரு பதிவை போட்டிருப்பதாகவும் கூறி வருகின்றனர். இதில் எது உண்மை என்பது குறித்து சாஹல் தான் விளக்க வேண்டும் என்ற கருத்துகளும் இணையத்தை சூழ்ந்தன.

இந்நிலையில் இதுகுறித்து சஹால், “எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவுசெய்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும்” என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News