பெற்றோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலும் உதவி செய்யும் சஹால்!
இந்தியாவில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதில் பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. இதற்காக கிரிக்கெட் உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பிய ஆர்சிபி வீரர் யுவேந்திர சாஹலின் பெற்றோருக்கு கரோனா தொற்று உறுதியாது. தாய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரின் தந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இந்த சூழலிலும் சஹால் கரோனா நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.
பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் கெட்டோ என்ற தன்னார்வ அமைப்பின் வலைதளம் மூலம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதில், எனக்கு நெருங்கிய தோழி கரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசியு-வில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் மருத்துவ செலவுகளை இவ்வளவு நாட்கள் சமாளித்து வந்த நிலையில் மேலும் ரூ. 4 லட்சம் தேவைப்படுகிறது. எனவே தயவுக்கூர்ந்து யாரேனும் உதவுங்கள் எனக்கேட்டிருந்தார்.
இதனை அறிந்த யுவேந்திர சஹால், உடனடியாக அந்த அமைப்பின் வலைதளத்தில் ரூ. 2 லட்சத்தை நிவாரமாக வழங்கியுள்ளார். இதனை அவர் இரண்டு கட்டமாக பிரித்து கொடுத்துள்ளார். சாஹல் இதற்கு முன்னர் இதே அமைப்பிற்காக விராட் கோலி செய்த நிதி திரட்டல் முயற்சிக்கு ரூ.95,000 கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஹாலின் இந்த உதவியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.