சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி!

Updated: Mon, Feb 05 2024 13:56 IST
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களைக் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி முதால் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலைப்பெற்றது.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் சதத்தின் மூலமாக 255 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 399 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினாலும், அதன்பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் அந்த அணி தற்போது வரை 7 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களை எடுத்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ஆட்டமிழந்த விதம் தற்போது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதன்படி இந்த இன்னிங்ஸின் 42ஆவது ஓவரை இந்திய வீரர் குல்தீப் யாதவ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை டிஃபென்ஸ் செய்ய முயற்சித்த ஸாக் கிரௌலி பந்தை கணிக்க தவற, பந்து நேராக அவரடி பேடில் பட்டது. இதையடுத்து இந்திய வீரர்கள் எல்பிடபிள்யூ முறையிட கள நடுவர் நாட் அவுட் என தீர்பாளித்தார். இதனை எதிர்த்து இந்திய அணி டிஆர்எஸ் எடுத்தனர். 

 

இதனை மூன்றாம் நடுவர் சோதிக்கையில் பந்து நேராக லெக் ஸ்டம்பை தாக்குவது போல் காணொளியில் காட்டபட்டது. இதனையடுத்து கள நடுவரும் தனது முடிவை மாற்றி அவுட் என தீர்பளித்தார். ஆனால் மூன்றாவது நடுவரின் பரிசோதனையின் போது பந்து நேராக செல்வது போல் காட்டது பெரும் விவாதமாக கிளம்பியுள்ளது. ஏனெனில் குல்தீப் யாதவ் வீசிய அந்த பந்து முதலில் காட்டப்படும் போது திரும்பும் வகையில் அமைந்திருந்தது.

 

ஆனால் மூன்றாம் நடுவரின் பரிசோதனையில் அது நேராக செல்வது போல் காட்டப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் அந்த காணொளியை கண்டு ஆச்சரியமடைந்தன. மேலும் அந்த அவுட் குறித்த விவாதங்களும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை