ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆபார வெற்றி பெற்ற வங்கதேசம்!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே சகாப்வா - மியார்ஸ் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும் மற்ற வீரர்கள் சரிவர விளையாடததால் 19 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சகாப்வா 43 ரன்களையும், டியான் மியார்ஸ் 35 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு சௌமியா சர்க்கார் - முகமது நைம் இணை ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
பின்னர் 50 ரன்களில் சௌமியா சர்கார் ஆட்டமிழக்க, இறுதிவரை விளையாடிய முகமது நைம் அணியை வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம் 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய முகமது நைம் 63 ரன்களைச் சேர்த்தார். மேலும் அதிரடியாக விளையாடிய சௌமியா சர்கார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.