ZIM vs IND, 3rd ODI: முதல் சதத்தைப் பதிவுசெய்த ஷுப்மன் கில்! ஜிம்பாப்வேவுக்கு 290 டார்கெட்!
ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ராகுல் - ஷிகர் தாவன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு நல்ல அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவான் 40 ரன்களிலும், ராகுல் 30 ரன்களிலும் விக்கெட்டைஇ இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - இஷான் கிஷான் இணை பொறுப்பான அட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷுப்மன் கில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின் அவருக்கு துணையாக விளையாடிய இஷான் கிஷானும் அரைசதம் கடந்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அடுத்து களமிறங்கிய தீபக் ஹூட ஒரு ரன்னோடு பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் 130 ரன்களைச் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.