ZIM vs IND, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி?
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையி, அடுதடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இரு அணிகளுடைய கணிக்கப்பட்ட உத்தேச லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இத்தொடரின் முதல் டி20 போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், ஆடுத்தடுத்த போட்டிகளில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் சொதப்பிய அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளன. இதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலும் இந்திய அணி அபாரமான வெற்றிகளைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கொண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களும் அணியில் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஷிவம் தூபே ஆகியோர் வரிசைக்கட்டி நிற்கின்றனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அபிஷேக் சர்மா, ஷிவம் தூபே ஆகியோர் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச லெவன்: ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய்.
ஜிம்பாப்வே அணி
மறுபக்கம் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியானது இத்தொடருக்கான அணியில் பல்வேறு மாற்றங்களைச் சேய்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் அந்த அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ஆனால் அடுத்தடுத போட்டிகளில் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதிலும் கடைசி போட்டியில் அந்த அணி ஃபீல்டிங்கிலும் சொதப்பியதன் காரணமாகவேதோல்வியைச் சந்தித்துள்ளது. இருப்பினும் அந்த அணியும் தங்களால் முடிந்த அளவிற்கு வெற்றிக்காக போராடு குணத்தைக் கொண்டுள்ளது.
ஜிம்பாப்வே அணியின் பேட்டிங்கில் பிரையன் பென்னட், வெஸ்லி மதேவெரா, ஜோனதன் கேம்ப்பெல், இன்னசென் கையா, கிளைவ் மடாண்டே ஆகியோரும், பந்து வீச்சில் பிளெஸிங் முஸரபானி, வெலிங்டன் மஸகட்ஸா, லுக் ஜோங்வா, டெண்டாய் சதாரா ஆகியோருடன் கேப்டன் சிக்கந்தர் ரஸா, பிரையன் பென்னட் ஆகியோரும் பந்துவீச்சில் தங்களது பங்களிப்பை செலுத்து வருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இப்போட்டியில் அந்த அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியில் கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வே உத்தேச லெவன்: வெஸ்லி மதேவெர, தடிவானாஷே மருமணி, பிரையன் பென்னட், சிக்கந்தர் ரஸா (கே), தியான் மேயர்ஸ், ஜானதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மஸகட்ஸா, ரிச்சர்ட் ந்ங்கரவா, பிளெஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ZIM vs IND 3rd T20I Dream11 Team
- விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்)
- பேட்ஸ்மேன்கள் - ஆபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் , வெஸ்லி மதேவெர
- ஆல்ரவுண்டர் - சிக்கந்தர் ரஸா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், பிரையன் பென்னட்
- பந்துவீச்சாளர்கள் - ஆவேஷ் கான், பிளெஸிங் முசரபானி, ரவி பிஷ்னோய்,டெண்டாய் சதாரா