ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கி சமனிலையில் இருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மதவெரே 14, கமுன்ஹுகம்வே ஒரு ரன்னிலும், முன்யோங்கா 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பென்னெட் - கேப்டன் ரியான் பர்ல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பென்னெட் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மடாண்டெவும் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

அதன்பின் இறுதியில் ரியான் பர்ல் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் மவுடா 8 ரன்களையும், ஜோங்வா 13 ரன்களையும் அடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே எடுத்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில், கரெத் டெலானி, கிரேக் யங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் இப்போட்டியிலும் சொதப்பினர். அதன்படி ஆண்ட்ரூ பால்பிர்னி 13, கேப்டன் பால் ஸ்டிர்லிங் 6, லோர்கன் டக்கர் 8, கர்டிஸ் காம்பெர் 5 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகள இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஹாரி டெக்டர் - ஜார்ஜ் டக்ரெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்தனர். 

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி டெக்டர் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்களையும், ஜார்ஜ் டக்ரெல் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 49 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் அயர்லாந்து அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன்  6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News