ZIM vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகிய டாம் லேதம்; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!
ZIM vs NZ, 1st Test: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக அனுபவ ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டி முன்னதாக நியூசிலாந்து அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பர்மிங்ஹாம் அணிக்காக டி20 போட்டியில் விளையாடிய போது டாம் லேதம் காயத்தைச் சந்தித்ததாகவும், அவர் தற்போது வரையிலும் தனது காயத்தில் இருந்து குணமடைவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக டாம் லேதம் முதல் போட்டியில் இருந்து விலகிய நிலையில், மிட்செல் சான்ட்னர் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்சமயம் மிட்செல் சான்ட்னர் நியூசிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்துக்காக 30 டெஸ்டில் விளையாடிய சான்ட்னர் 1066 ரன்களையும், 74 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (C), டாம் பிளண்டெல், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், மைக்கேல் பிரேஸ்வெல், ராச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், வில் யங்
Also Read: LIVE Cricket Score
ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், தனகா சிவாங்கா, பென் கரண், ட்ரெவர் குவாண்டு, ராய் கையா, தனுனுர்வா மகோனி, கிளைவ் மடாண்டே, வின்சென்ட் மசெகேசா, வெலிங்டன் மசகட்ஸா, பிளஸ்ஸிங் முசரபானி, நியூமன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராசா, தஃபட்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.