பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.  

Advertisement

இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஷஹிஸதா ஃபர்ஹான், ஒமைர் யூஃப் மற்றும் உஸ்மான் கான் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சல்மான் ஆகா - தயாப் தாஹிர் உள்ளிட்டோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கசிம் அக்ரம் 20 ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சல்மான் ஆகாவும் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் அஃப்ராத் மின்ஹாஸ் 22 ரன்களையும், அப்பாஸ் அஃப்ரிடி 15 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் மருமணி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 15 ரன்களை எடுத்திருந்த மருமணி தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் பிரையன் பென்னெட் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் களமிறங்கிய தியான் மேயர்ஸ் 13 ரன்களிலும், வெஸ்லி மதவேரா 7 ரன்களுக்கும், ரியான் பார்ல் 6 ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில், அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கேப்டன் சிக்கந்தர் ரஸாவும் 19 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து மஸகட்ஸா மற்றும் தஷிங்கா ஆகியோரும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இருப்பினும் இறுதியில் டினோடெண்டா மபோசா ஒருபவுண்டரி, ஒரு சிக்ஸர் என 12 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News