ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!

Updated: Thu, Aug 28 2025 20:40 IST
Image Source: Cricketnmore

Zimbabwe vs Sri Lanka 1st ODI Match Prediction: இலங்கை அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. 

இதில் ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநால் போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை தொடாருக்கு முன் இலங்கை அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இந்த தொடரை எதிர்கொள்கிறது. இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

ZIM vs SL 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இலங்கை
  • இடம் -  ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், ஹராரே
  • நேரம்- ஆகஸ்ட் 29, மதியம் 1 மணி (இந்திய நேரப்படி)

Harare Sports Club, Harare Pitch Report

ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 203 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 91 முறையும், முதலில் பந்துவீசிய அணி 106 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 229 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அதிகபட்சமாக 408 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ZIM vs SL ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 64
  • இலங்கை - 49
  • ஜிம்பாப்வே - 12
  • முடிவுகள் இல்லை - 03

ZIM vs SL 1st ODI : Where to Watch?

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காண முடியும்.

ZIM vs SL 1st ODI: Player to Watch Out For

இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களாக கேப்டன் சரித் அசலங்கா, தொடக்க வீரர் பாதும் நிஷங்க மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். மறுபுறம், ஜிம்பாப்வேயைப் பற்றிப் பேசினால், அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களான பிரெண்டன் டெய்லர், கிரெய்க் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் அணிக்காக சிறப்பாக செயல்பட முடியும். 

Zimbabwe vs Sri Lanka 1st ODI Probable Playing XI

Zimbabwe 1st ODI Probable Playing XI: பிரையன் பென்னட், பிரெண்டன் டெய்லர், பென் கரண், கிரேக் எர்வின் (கேப்டன்), வெஸ்லி மாதேவெரே, சிக்கந்தர் ராசா, கிளைவ் மடாண்டே (விக்கெட் கீப்பர்), ஜொனாதன் கேம்ப்பெல், ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு.

Sri Lanka 1st ODI Probable Playing XI : பதும் நிசங்க, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க (கேப்டன்), ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமிர, மகேஷ் திக்ஷன, அசித்த பெர்னாண்டோ.

Also Read: LIVE Cricket Score

ZIM vs SL 1st ODI Match Prediction, ZIM vs SL Pitch Report, Today's Match ZIM vs SL, ZIM vs SL Prediction, ZIM vs SL Predicted XIs, Cricket Tips, ZIM vs SL Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs Sri Lanka

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை