
Cricket Image for டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி! (Image Source: twitter)
ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று (மார்ச் 17) அபுதாபியில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதையடுத்து, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினார். இதன் மூலம் 6 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 66 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ், 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கானும் அரைசதம் கடந்தார். அதன்பின் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குர்பாஸ் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.