
வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டெம்பா பவுமா 93 ரன்களை குவித்து 7 ரன்னில் சதத்தை தவறவிட்டார். கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கர் 67 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சிறு சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 367ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் மஹ்மதுல் ஹசன் ஜாய் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஹசன் ஜாய் 137 ரன்களை குவிக்க, அவரது அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 298 ரன்கள் அடித்தது.