
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணியை மிகவும் எளிதாக தோற்கடித்தது நியூசிலாந்து அணி. இதில் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரரான ராஸ் டெய்லர் 47 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கான காயத்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி சரி செய்யும் என்று நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிக்கு பிறகு பேசிய ராஸ் டெய்லர் "2019 ஆம் உலகக்கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியைடைந்தது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதனை மறக்க இந்த வெற்றி எங்களுக்கு பெரிதும் உதவும். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் எங்களுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்ள் என அனைவரும் பெரும் ஆதரவைத் தெரிவித்தனர்.