Advertisement
Advertisement
Advertisement

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: அட்டவணையை அறிவித்தது ஐசிசி!

நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement
2022 Women's World Cup Schedule Announced, New Zealand To Play West Indies In Opener
2022 Women's World Cup Schedule Announced, New Zealand To Play West Indies In Opener (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 15, 2021 • 03:29 PM

நியூசிலாந்தில் அடுத்த வருடம் மகளிர் அணிகளுக்கு இடையேயாப ஒருநாள் ஓவர் உலகக் கோப்பைப் தொடர் நடைபெறுகிறது. மார்ச் 4 முதல் தொடங்கும் மகளிர் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 15, 2021 • 03:29 PM

அதன்படி மொத்தம் 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 

Trending

இந்த 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் நிசிலாந்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. அதேசமயம் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் உலகக் கோப்பை போட்டிகள்

  • இந்தியா vs பாகிஸ்தான், மார்ச் 6
  • இந்தியாvs நியூசிலாந்து, மார்ச் 10
  • இந்தியா vs மே.இ. தீவுகள், மார்ச் 12
  • இந்தியா vs இங்கிலாந்து, மார்ச் 16
  • இந்தியா vs ஆஸ்திரேலியா, மார்ச் 19
  • இந்தியாvs வங்கதேசம், மார்ச் 22
  • இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, மார்ச் 27

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement