ஐபிஎல் தொடரின் 14வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள செய்தி ஒன்று ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடியாய் வந்து விழுந்துள்ளது.
சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர் அவி பரோட். 29 வயதே ஆகும் இவர் இன்று மாரடைப்பால் காலமானார். 19வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திகழ்ந்தவர் அவி பரோட். இதுமட்டுமல்லாமல் ராஞ்சி கோப்பை தொடரில் 2019 -20 சீசனில் சவுராஷ்ட்ரா அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர். சவுராஷ்டிராவுக்காக 21 ரஞ்சி கோப்பை போட்டிகள், 17 ஏ பிரிவு போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சையத் முஷ்டாக் அலி ட்ராஃபியில் 53 பந்துகளில் 122 ரன்களை அடித்தார். விரைவில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கபட்டது.