
Cricket Image for Nz vs Ban: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து! (Image Source: Google)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கிளென் பிலீப்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலீப்ஸ் 58 ரங்களையும், டேரில் மிட்ச்செல் 37 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி மெஹ்தி ஹசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.