Advertisement

2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 06, 2025 • 11:47 AM

WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் க்ரீன் உள்ளிட்டோர் அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 06, 2025 • 11:47 AM

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பியூ வெப்ஸ்டர் 60 ரன்களையும், அலெக்ஸ் கேரி 63 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களையும், ஜான் காம்பெல் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களையும், ஷமார் ஜோசப் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வு மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து கேமரூன் க்ரீன் 6 ரன்களுடனும், நாதன் லையன் 2 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் நாதன் லையன் 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் கேமரூன் க்ரீன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் 52 ரன்களில் கேமரூன் க்ரீனும், 71 ரன்களில் ஸ்டீவ் ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பியூ வெப்ஸ்டர் 2 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 39 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அலெக்ஸ் கேரி 26 ரன்களுடனும், கேப்டன் கம்மின்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 254 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸை தொடரவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement