
பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த வியாழக்கிழமை கராச்சி நகரம் வந்தனர். முதல் டி20 போட்டி நாளை கராச்சியில் தொடங்குகிறது. வீரர்களுக்கு பயோ-பபுள் உருவாக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷெல்டன் காட்ரெல், ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோரும், ஒரு ஊழியர் என 4 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவி்ப்பில்,“பாகிஸ்தானுக்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றபின் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் மற்றும் பயிற்சிப்பிரிவில் இல்லாத ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.