
7 Australia Star Players Opt Out Of West Indies, Bangladesh Tours (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி வருகிற ஜூலை மாதம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இத்தொடருக்கான ஆரோன் ஃபின்ச் தலைமையிலான 24 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயோ பபுள் சூழல் காரணமாக பல முன்னணி ஆஸ்திரேலிய வீரர்கள் இத்தொடரிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இத்தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜெய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.