Advertisement

ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில் அஸ்வின் !

பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 04, 2021 • 19:08 PM
Ashwin
Ashwin (Image Source: Google)
Advertisement

பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இத்தொடரில் நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Trending


இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

இதற்கிடையில் ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் 176 ரன்களையும், 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதால் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 

மேலும் இந்த விருதுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் கெய்ல் மேயர்ஸ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

மகளிர் பிரிவில் இங்கிலாந்து வீராங்கனைகள் டாமி பியூமண்ட், ஆல்ரவுண்டர் நாட் சேவியர், நியூசிலாந்து அணியின் ப்ரூக் ஹாலிடே ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement