BAN vs IRE, 3rd ODI: அயர்லாந்தை 101 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் பாதியிலெயே ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செல்ஹேட்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
Trending
அதன்படி ஸ்டீபன் தொஹானி, பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹேரி டெக்டர் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த லோர்கன் டக்கர் - கர்டிம் கேம்பர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் லோர்கன் டக்கர் 28 ரன்களிலும், கர்டிஸ் காம்பெர் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களாலும் வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதன்மூலம் அயர்லாந்து அணி 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளையும், டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், எபோடட் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now