Advertisement
Advertisement
Advertisement

டி10 லீக் எலிமினேட்டர்: டீம் அபுதாபியை வெளியேற்றியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!

டீம் அபுதாபி அணிக்கெதிரான டி10 லீக் எலிமினேட்டர் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 03, 2022 • 23:04 PM
Abu Dhabi T10: Josh Little's big blows help Deccan Gladiators stop Team Abu Dhabi in thrilling Elimi
Abu Dhabi T10: Josh Little's big blows help Deccan Gladiators stop Team Abu Dhabi in thrilling Elimi (Image Source: Google)
Advertisement

டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் டிம் அபுதாபி அணி, டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டிம் அபுதாபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியில் கோஹ்லர் 6 ரன்களிலும், வில் ஸ்மீத் 6, கேப்டன் பூரன் 14, ஆண்ட்ரே ரஸ்ஸல் ரன் ஏதுமின்றியும், டேவிட் வைஸ் 13 ரன்களோடும் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஓடியன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Trending


இதன்மூலம் 10 ஓவர்கள் முடிவில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களைச் சேர்த்தது. டீம் அபுதாபி அணி தரப்பில் நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டீம் அபுதாபி அணி அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ரன்னிலும், கிறிஸ் லின் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் அதன்பின் களமிறங்கிய பிராண்டன் கிங், ஃபாபியன் ஆலான், ஆதில் ரஷித் என அனைவரும் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் 10 ஓவர்கள் முடிவில் டீம் அபுதாபி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement