
Abu Dhabi T10 league to start on November 19 (Image Source: Google)
கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற பரிமாணங்களில் நடத்தப்பட்டுவந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பத்து ஓவர்கள் மட்டுமே கொண்ட டி10 கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று வரும் நிலையில உலகின் தலைசிறந்த வீரர்கள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், நடப்பாண்டில் இத்தொடரின் 5ஆவது சீசனை நடத்த டென் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மாதத்தில் டி10 தொடரின் ஐந்தாவது சீசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.