உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
முன்னதாக இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் தங்கள் உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
Trending
இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான இந்த அணியில் மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீட், காலின் அக்கர்மேன், வெஸ்லி பரேஸி, பால் வான் மீக்ரன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.
முன்னதாக ஜிம்பாப்வேவில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில் நெதர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இத்தொடருக்கு முன்னேறியது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), கொலின் அக்கர்மேன், ஷாரிஸ் அகமது, வெஸ்லி பாரேசி, லோகன் வான் பீக், ஆர்யன் தத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரியான் க்ளீன், பாஸ் டி லீட், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே, தேஜா நிடமானுரு, மேக்ஸ் ஓ டவுட், விக்ரம் சிங் & சாகிப் சுல்பிகர்.
Win Big, Make Your Cricket Tales Now