
Afghanistan Becomes 2nd Team To Qualify For U19 World Cup Semifinals (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குரூப் சி பிரிவில் 2ஆம் இடம் பிடித்த ஆஃப்கானிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் முதல் இடம் பிடித்த இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்துல் ஹாதி 37 ரன்னும், நூர் அகமது 30 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் வினுஜா ரான்பால் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆஃப்கானிஸ்தான் அணியினரின் அசத்தலான பீல்டிங்கில் இலங்கை அணி சிக்கியது.