
Afghanistan to host Netherlands for 3 ODIs in January (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு அங்கு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை மீட்டெடுக்கும் விதமாக வரும் ஆண்டு ஜனவரி மாதம் நெதர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நடத்த ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 21ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியையும், ஜனவரி 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளையும் நடத்த ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.