Advertisement
Advertisement
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்!

தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 31, 2024 • 03:33 PM

வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.  

Bharathi Kannan
By Bharathi Kannan
July 31, 2024 • 03:33 PM

இந்நிலையில் இத்தொடருக்காக தகுதிப்பெற்ற அனைத்து அணிகளும் தயாராகும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்தவகையில் தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதாக இன்று அறிவித்துள்ளது. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் நேருநேர் மோதும் முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

இதற்கு முன் இவ்விரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே சந்தித்துள்ள நிலையில், தற்சமயம் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. அதன்படி தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க தொடர் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி - செப்டம்பர் 18 - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - செப்டம்பர் 20 - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - செப்டம்பர் 22 - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement