
Afghanistan vs Ireland, Super 12, T20 World Cup - Match Preview, Cricket Match Prediction, Where To (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் ஆண்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி வலிமை வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் பால் ஸ்டிர்லிங், பால்பிர்னி, டக்கர், டெக்கர் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன.
மேலும் பந்துவீச்சில் ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கர்த்தி, ஃபின் ஹேண்ட், மார்க் அதிர், கரேத் டெலானி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பக்கபலமாக உள்ளது.