டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து - உத்தேச அணி & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது.
இதில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs ஸ்காட்லாந்து
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் பல வெற்றிகளை குவித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தான்.
அதேபோல் பேட்டிங்கில் ஹஸ்ரதுல்லா ஸஸால், முகமது ஷசாத், ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வருவதும், பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் இருப்பதும் அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்துகிறது.
அதேசமயம் கைல் கொட்சர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியும் நடப்பு உலகக்கோப்பை முதல் சுற்று போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 6
- ஆஃப்கானிஸ்தான் வெற்றி - 6
- ஸ்காட்லாந்து - 0
உத்தேச அணி
ஆப்கானிஸ்தான் - முகமது ஷசாத், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், கரீம் ஜனத், அஸ்கர் ஆஃப்கான், நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி (கே), குல்பாடின் நைப், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்.
ஸ்காட்லாந்து - ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர் (கே), மேத்யூ கிராஸ் , ரிச்சி பெர்ரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட்லி வீல்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - முகமது ஷாசாத்
- பேட்டர்ஸ் - கலம் மக்லியோட், ஜார்ஜ் முன்சி, ஹஸ்ரத்துல்லா ஸஸாய், நஜிபுல்லா-சத்ரான்
- ஆல்-ரவுண்டர்கள் - ரிச்சி பெர்ரிங்டன், கிறிஸ் கிரீவ்ஸ், முகமது நபி
- பந்துவீச்சாளர்கள் - மார்க் வாட், ஜோஷ் டேவி, ரஷித்-கான்.
Win Big, Make Your Cricket Tales Now