Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்!

ஐபிஎல் 2023 தொடருக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல் ரவுண்ட்ர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 23, 2023 • 12:26 PM
Aiden Markram is the new captain of Sunrisers Hyderabad!
Aiden Markram is the new captain of Sunrisers Hyderabad! (Image Source: Google)
Advertisement

கடந்த இரு வருடங்களாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடியது. 2021இல் 3 வெற்றிகளை மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்தையே பிடித்தது. கடந்த இரு வருடங்களில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என ஐபிஎல் போட்டியின் பலவீனமான அணியாகவே சன்ரைசர்ஸ் இருந்தது. 

இதையடுத்து சன்ரைசர்ஸ் - பயிற்சியாளர் டாம் மூடி என இரு தரப்பும் பிரிந்து செல்ல முடிவெடுத்தன. பிறகு, பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த வருடம் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த வருடம் குஜராத் அணியில் விளையாடவுள்ளார். 

Trending


இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க பேட்டர் ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 28 வயது மார்க்ரம், தென் ஆப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

மேலும் சமீபத்தில் நடைபெற்ற எஸ்ஏ 20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் தலைமை தாங்கி, சாம்பியன் பட்டம் வென்றார். இதன் காரணமாக ஐபிஎல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement