
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் 1 -0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய அவரது இந்த சாதனை வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது.
அவரின் இந்த சாதனைக்காக பாராட்டுக்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் குவிந்துவர இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்கும் தனது பாராட்டினை அவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.