
Ajinkya Rahane, Cheteshwar Pujara picked in Ranji Trophy squads (Image Source: Google)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால், அணியில் அவர்களது இடம் கேள்விக்குள்ளானது.
இருவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி ரன் குவிக்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
இந்த நிலையில், ரஞ்சிக் கோப்பைக்கு பிரித்வி ஷா தலைமையில் மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரஹானே பெயர் இடம்பெற்றுள்ளார். அதேபோல புஜாராவும் சௌராஷ்டிரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.