
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த சம்பவத்தில் நடுவர்களும் இந்திய அணியை வெளியேறக்கூறியதற்கு ஓய்வறையில் உட்கார வரவில்லை, விளையாட வந்திருக்கிறோம் என்று இந்திய அணியி்ன் கேப்டனாக இருந்த ரஹானே பதிலடி தெரிவித்துள்ளார்.
2020-21ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி நாடு திரும்பியது. இந்தத் தொடரில் முதல்டெஸ்ட் போட்டி முடிந்ததும் விராட் கோலி தாயகம் திரும்பிவிட்டார். அடுத்தடுத்த போட்டிகளுக்கு ரஹானேதான் கேப்டன்ஷிப் செய்தார்.
இதில் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 3ஆவது நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்தபோது, ரசிகர்களால் இனவெறி வார்த்தைகளால் தாக்கப்பட்டார். அதுகுறித்து கேப்டன் ரஹானேவிடம் சிராஜ் புகார் செய்தார். அதன்பின் 4ஆவது நாள் ஆட்டத்திலும் இந்திய அணியினர் பீல்டிங் செய்தபோது இது போன்ற சம்பவம் நடந்ததால் ஆட்டத்தை 10 நிமிடங்கள் நிறுத்தினர்.