
All-rounder George Garton to join Adelaide Strikers ahead of Big Bash League (Image Source: Google)
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜார்ஜ் கார்டன். இவர் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வருகிற டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பிபிஎல் அணிகளில் ஒன்றான அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஜார்ஜ் கார்டனை அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது.