
All-rounder Krunal Pandya Wants to Emulate This Feat Achieved by Yuvraj Singh and Kieron Pollard (Image Source: Google)
இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான குர்னால் பாண்டியா கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 19 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து 2016 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 80 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹார்டிக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோரது ஜோடி மும்பை அணிக்காக பெரிய பலமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஆரம்பம் முதலே சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குர்னால் பாண்டியா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தான் படைக்க விரும்பும் ஒரு ஆசை குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்-ஐ அடிக்க வேண்டும் இது என்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. நிச்சயம் அதை செய்ய எனக்கு ஆசை” என்று தெரிவித்துள்ளார்.