
கடந்த 2018இல் தென்னாப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியது. அந்த பயணத்தில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விதிகளுக்கு அப்பாற்பட்டு பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த குற்றத்திற்காக அப்போதைய ஆஸி. அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பாங்கிராஃப்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. அதை தான் நீக்க வேண்டும் என ஆலன் பார்டர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் பந்தை சேதம் செய்து, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஒத்துழைக்கும் வகையில் கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. என்ன அதை சோடா மூடி, உப்புக் காகிதம் போன்றவற்றை கொண்டு இல்லாமல் நேச்சுரலாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் அது குற்றத்தில் சேராது.