
Amit Mishra Reveals why MS Dhoni chews his bat! (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி ஓபனிங் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 41 (33), டிவோன் கான்வே 87 (49) இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இதையடுத்து வந்த ஷிவம் துபேவும் தன் பங்கிற்கு அதிரடியில் கலக்கினார். இதன்பின்னர் ராயுடு வந்த வேகத்தில் 5 ரன்களில் வெளியேற, கேப்டன் தோனி 5ஆவது வீரராக களமிறங்கினார்.
எதிர்கொண்ட 2ஆவது பந்திலேயே சிக்சர் விளாசிய தோனி, நோக்கியா வீசிய கடினமான பந்தில் பேட்டை வளைத்து சிக்சருக்கு அனுப்பினார். இந்தப் போட்டியில் தோனி 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.