Advertisement

மகளிர் ஆஷஸ் 2025: அனபெல் சதர்லேண்ட் அபார சதம்; ரன் குவிப்பில் ஆஸ்திரேலியா!

மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement
மகளிர் ஆஷஸ் 2025: அனபெல் சதர்லேண்ட் அபார சதம்; ரன் குவிப்பில் ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ் 2025: அனபெல் சதர்லேண்ட் அபார சதம்; ரன் குவிப்பில் ஆஸ்திரேலியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 31, 2025 • 08:14 PM

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே ஏமாற்றமளிக்கும் விதமாக மையா பௌச்சர் 5 ரன்னிலும், டாமி பியூமண்ட் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் - நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 31, 2025 • 08:14 PM

இதில் ஹீதர் நைட் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சோபியா டங்க்லியும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய டேனியல் வைட் 22 ரன்னிலும், ஏமி ஜோன்ஸ் 3 ரன்னிலும், எக்லெஸ்டோன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 170 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளையும், கிம் கார்த், டேர்சி பிரௌன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Trending

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு போப் லிட்ச்ஃபீல்ட் - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜார்ஜியோ வோல் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த போப் லிட்ச்ஃபீல்ட் 20 ரன்களுடனும், அனபெல் சதர்லேண்ட் 24 ரன்களுடனும் களத்தில் இன்னிங்ஸைத் தொடங்கினர். 

இதில் போப் லிட்ச்ஃபீல்ட் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அனபெல் சதர்லேண்டுடன் இணைந்த கேப்டன் அலிசா ஹீலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சதர்லேண்ட் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த கேப்ட அலிசா ஹீலி 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சதர்லேண்ட் - பெத் மூனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் 21 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 163 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் தனது பங்கிற்கு 44 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்களைக் குவித்துள்ளது. இதில் பெத் மூனி 98 ரன்களுடனும், தஹ்லியா மெக்ராத் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், சோஃபி எக்லெஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement